செட்டிகுளம் – வீரபும் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுப்பு..!!

91
Vanni Network

வவுனியா செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள்,மற்றும் வைரவர்,முருகன்,அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று ( 10.04 ) காலை ஆலயத்திற்கு பூஜைக்காக சென்ற ஆலயத்தின் குருக்கள் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடன் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளனர்.

பின் ஆலய நிர்வாகத்தினரால் செட்டிக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.