வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இருந்து நல்லூர் ஆலயத்திற்கு யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தை மாயம்!

58

நல்லூரில் யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து யாசகம் பெற பெற்றோருடன் வருகை தந்த குழந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளது.

அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போதே இரண்டரை வயதுள்ள பெண் குழந்தை காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.