வடக்கு பல்கலைக்கழகங்களில் முற்றாக புறக்கணிக்கப்படும் தமிழ் மொழி!

27

வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த 12.09.2023 அன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த மாணவர்களை வரவேற்பதற்காக காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாவது பல்கலைக் கழகமும்,  தமிழ் மக்கள் வாழும் பகுதியில் உள்ள வன்னிக்கான பல்கலைக்கழகமுமான வவுனியா பல்கலைக் கழகம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிவதற்கு முன்னரே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.