Friday, September 13, 2024

36 வயதில் அதே இளமையுடன் ஜொலிக்கும் வனிதாவின் தங்கை : வைரலாகும் புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்த நடிகையான ஸ்ரீதேவி விஜயகுமாரின் புகைப்படங்கள் இணையத்தை அழகாக்கிக் வருகின்றது.
தமிழில் ரிக்‌ஷா மாமா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். காதல் வைரஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். இவர் மாதவனுடன் நடித்த பிரியமானதோழி திரைப்படத்தில் இவரின் நடிப்பு இன்னும் பிரபலமாக்கியது. தமிழில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் 2009ஆம் ஆண்டு தொழிலதிபர் நாகுலை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு அழகான ஒரு பெண்குழந்தையும் உள்ளது.

இவருக்கு தற்போது 36 வயதாகின்ற போதிலும் அதே இளமையுடன் இருக்கிறார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கண்கவர் நிறங்களில் உடையணித்து விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவார்.அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular