Sunday, May 19, 2024

கிளிநொச்சியில் கொள்வனவு செய்யப்பட்ட கோழி இறகு கேக்

கிளிநொச்சி நகரில் சில நாட்களுக்கு முன் நுகர்வோர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட கேக் ஒன்றில் கோழி இறகு காணப்பட்டுள்ளது.
இதனை ஒருவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,“கிளிநொச்சி நகரிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட கேக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காக வெட்டிய போது முழுமையான கோழி இறகு அதனுள் காணப்பட்டது.

தயவு செய்து உணவு சுகாதாரம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.ஏற்கனவே நாம் உண்ணும் உணவில் அரைவாசி நஞ்சாகவே காணப்படுகிறது. இதில் இப்படியும் என்றால் மனித வாழ்க்கை நிலை?”என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு பல இடங்களில் உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் சுகாதாரமற்ற தன்மை காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.இருப்பினும் மேற்கூறப்பட்டவாறு சில உணவகங்கள் சார்ந்த செய்திகளே வெளிவந்துள்ளன. இன்னும் சில இடங்களில் அதை பொருட்படுத்தாத நிலையும் காணப்படுகின்றது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பொது சுகாதார துறைக்கு தெரியப்படுத்தப்பட்டாலும் குறித்த விடயங்கள் தொடர்பில் எந்தளவிற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

RELATED ARTICLES

Most Popular