Wednesday, May 8, 2024

50 ஆண்களை ஏமாற்றிய மொடல் அழகியின் ஹனிட்ராப் வலையமைப்பு

இளம் மொடல் அழகியொருவர் 50இற்கும் மேற்பட்ட ஆண்களை படுக்கைக்கு அழைத்து, அவர்களை மிரட்டி பெருந்தொகை பணம் பறித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஆண்களை காதலித்து அல்லது படுக்கைக்கு அழைத்து தமக்கு தேவையான விடயங்களை பெற்றுக்கொள்வதை ஹனிட்ராப் என்பார்கள். ஹனிட்ராப் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, .இந்த ஹனிட்ராப் வலையமைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்களை வலையில் வீழ்த்தி பணம் பறித்த மொடல் அழகி தலைமறைவாகியிருந்தந நிலையில், மும்பையில் வைத்து கர்நாடக பொலிசார் கைது செய்து, கர்நாடகாவிற்கு அழைத்து வந்துள்ளனர்.புகார்தாரரின் கூற்றுப்படி, நேஹா என்ற மெஹர் என அடையாளம் காணப்பட்ட மொடல் அழகியே இந்த படுக்கையறை வித்தையை காண்பித்துள்ளார்.

நேஹாவும், முறைப்பாடாளரான ஆணும் ரெலிகிராம் செயலி மூலம் அறிமுகமாகியுள்ளனர். அதன் பிறகு இருவரும் வட்ஸ்அப்பில் பேச ஆரம்பித்தனர்.தனது கணவர் டுபாயில் வேலை செய்வதாகவும், தனிமையில் தவித்து வருவதாகவும் நேஹா கூறியுள்ளார். நேஹாவின் தவிப்பில் சபலமாகி வழிந்து வழிந்து பேசியிருக்கிறார் அந்த ஆண். அவருடன் உடலுறவில் ஈடுபட விருப்பம் இருப்பதாக நேஹா கூறியுள்ளார். அத்துடன், அவர் தனது புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு தனது முகவரியையும் கொடுத்தார்.

மார்ச் 3 ஆம் திகதி மாலை 3:30 மணியளவில் நேஹாவின் வீட்டிற்குச் சென்றதாக அந்த நபர் கூறினார்.தான் வீட்டுக்குள் நுழைந்த போது, நோஹா நீச்சலுடையில் தன்னை வரவேற்றதாகவும், சிறிது நேரம் கழித்து, மூன்று தெரியாத நபர்கள் படுக்கையறைக்குள் திடீரென நுழைந்து, ஏன் அங்கு வந்தாய் என கேட்டு மிரட்டியதாக கூறினார்.

அத்துடன், மாற்றான் மனைவியுடன் கள்ளக்காதலா என கேட்டு அவரை தாக்கியுள்ளனர்.அவரது ஆடைகளை களைந்து, வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்று, அங்குள்ள மசூதிக்கு கொண்டு செல்லவுள்ளதாக மிரட்டியுள்ளனர். அத்துடன் நேஹாவை திருமணம் செய்து வைத்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

நோஹா முஸ்லிம் என்பதால், திருமணம் செய்பவரும் மதம் மாற வேண்டும், உடனடியாக சுன்னத் செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இவற்றை செய்யாமலிருப்பதெனில், தங்களுக்கு ரூ 3 லட்சம் கொடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து, PhonePe பேமெண்ட் செயலியைப் பயன்படுத்தி ஒரு மொபைல் எண்ணுக்கு ரூ.21,500 அனுப்பியதாக அவர் கூறினார்.அவர்கள் மேலும் ரூ. 2.5 லட்சம் கேட்டதாகவும், இரவு 8 மணி வரை தன்னை சிறைபிடித்து வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் போலீசாரிடம் தெரிவித்தார்.

கிரெடிட் கார்ட் தனது வீட்டில் இருந்ததாக கூறியுள்ளார். சரி கிரெடிட் கார்ட்டை எடுக்க தமது ஆள் ஒருவருடன் செல்லுமாறு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதன்போது, எப்படியோ அவர்களிடமிருந்து தப்பியோடிய நபர், பின்னர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணையில், நேஹாவின் வலையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் சிக்கி இருப்பது தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி ரூ.35 லட்சத்துக்கும் மேல் வசூலித்த கும்பல் வெற்றி பெற்றது.

ஏமாந்த ஆண்கள் 20 வயது முதல் 50 வயதானவர்கள் என தெரிய வந்துள்ளது. தனது வலையில் விழுந்து வீட்டுக்கு வரும் ஆண்கள் அனைவரையும் நேஹா நீச்சலுடையிலேயெ வரவேற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.நோஹாவின் ஹனிட்ராப் வலையமைப்பில் செயற்பட்ட 3 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular