Thursday, January 22, 2026

இலங்கை முழுவதும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

- Advertisement -
- Advertisement -

கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று (19.05) காலை 8.30 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மழை பெய்து வருவதால், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

களனி ஆறு, மகாவலி ஆறு, நில்வலா ஆறு மற்றும் கிங் ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தண்டுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிராம ஓயா, உறு போகு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய குளங்களைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular