Wednesday, May 8, 2024

அண்ணன் கல்யாண ஊர்வலத்தில் செம ஆட்டம் போட்ட தங்கச்சி.. இந்த ஆட்டத்தை பார்க்க குடுத்து வெச்சிருக்கனும்..!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. சில திருமணங்களில் கல்யாணப் பொண்ணே திடீரென நடனமாடி பட்டையைக் கிளப்புவதும் உண்டு. அந்தவரிசையில் இங்கே, ஒரு பெண், தன் அண்ணனின் கல்யாணத்திற்கு மணப்பெண் ஊர்வலத்தில் கூடவே வருகிறார். அப்போது திடீரென அவர் நடனமாடி அசத்துகிறார். அவரோடு சேர்ந்து உர்வலத்தில்வரும் கல்யாணப் பெண்ணும் ஆடத் துவங்கினார். அந்த இளம்பெண்ணின் நடனம் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

RELATED ARTICLES

Most Popular