Saturday, January 11, 2025

உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை

- Advertisement -
- Advertisement -

அண்மைக் காலமாக சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்தவகையில் மட்டக்களப்பில் மரக்கறி விலைகள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ பச்சமிளகாய் 1,300 ரூபாவும், ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாவும், ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சந்தை மரக்கறி விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறியுள்ளதாவது, தற்போது பச்சை மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஒரு கிலோ பச்சை மிளகாயை 1,200 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 1,300 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றோம்.

அதேவேளை,சந்தையில் ஒருகிலோ இஞ்சி 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதுடன் சந்தையில் ஒரு கிலோ இஞ்சியைக் கொள்வனவு செய்ய முடியாது அந்தளவிற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கரட் ஒரு கிலோ 500 ரூபாவாகவும், உர்ழைக்கிழங்கு 240 ரூபாவாகவும் பெரிய வெங்காயம் 150 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.இவ்வாறான தட்டுப்பாடு விலை உயர்வு காரணமாகப் பொதுமக்கள் தமது உணவான கறிகளில் பச்சைமிளகாய் இஞ்சி போன்றவற்றைச் சேர்த்துக்

கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை, மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular