Sunday, May 19, 2024

இணையத்தை பார்த்து நவீன முறையில் கஞ்சா செடி வளர்த்த 5 மருத்துவ மாணவர்கள் – பொறி வைத்து பிடித்த போலீசார்!

நவீன முறையில் கஞ்சா செடி வளர்த்து சம்பாதித்த 5 மருத்துவ மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.கர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டத்தில் டவுன் ஹலே குருபுரா பகுதியில் சிலர் வீடுகளில் கஞ்சா செடிகளை வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

அப்பொழுது அப்பகுதியில் ஒருவரது வீட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது, அதில் இரண்டு பேரை போலீசர் மடக்கி பிடித்தனர். அதில் விஜயாபுரம் மாவட்டம்ன், கீர்த்தி நகரை சேர்ந்த அப்துல் கயூம் (வயது 25) , அர்பிதா (வயது 24) என்பது தெரியவந்தது.

மேலும், இவர்களிடம் இருந்து போலீசார் ரூ. 20 ஆயிரம் மதிப்பு மிக்க 466 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.இந்நிலையில், ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்க்கும் செட் அப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், அங்கு வசித்து வந்த 3 இளைஞர்கள் தனி கூடாரம் அமைத்து பல்பு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தி நவீன முறையில் கஞ்சா செடி வளர்த்து வந்தனர்.

பின்னர் அந்த 3 போரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த விக்னராஜ் (வயது 28), தர்மபரி மாவட்டம் கடகத்தூரை சேர்ந்த பாண்டிதுரை, கேரளாவை சேர்ந்த வினோத் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும், கைதான 5 பேரும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அதிகமாக சம்பாதிப்பதற்காக இணையத்தை பார்த்து இந்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக கூறியுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular