Sunday, May 19, 2024

ஒடிசா தொடருந்து விபத்துக்கான காரணம் : வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய ஒடிசா தொடருந்து விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.இந்த விபத்து கடந்த (02.06.2023) ஆம் திகதி ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் இடம்பெற்றது.

தவறான வகையில் சமிக்ஞை வழங்கப்பட்டதே இந்த பாரிய தொடருந்து விபத்துக்கு முக்கியக் காரணம் என உயர்நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த விபத்து குறித்தான விசாரணை அறிக்கையை தொடருந்து திணைக்களத்திடம் தொடருந்து பாதுகாப்பு ஆணையம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமிக்ஞை இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்போது நிகழ்ந்த குறைபாடுகளே இந்த விபத்துக்கு காரணமாகும். சமிக்ஞை மற்றும் தகவல்தொடர்பு துறையின் பல்வேறு நிலைகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளன.

பாஹாநகா பஜார் தொடருந்து நிலையத்தில் இரு இணையான தொடருந்து பாதைகளின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சமிக்ஞை ஆளிகளில்(switch) காணப்பட்ட அசாதாரண செயற்பாட்டை, தொடருந்து நிலைய அதிகாரி சமிக்ஞை மற்றும் தகவல்தொடர்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.

மேலும் தொடருந்து பாதை மேற்பார்வையாளர்கள் குழு மேற்கொள்ள வேண்டிய பணியிலும் தவறுகள் நிகழ்ந்துள்ளன.இதையடுத்து உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த தொடருந்து விபத்து ஏற்பட்டிருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்ற தவறு கடந்த ஆண்டு பாங்க்ரநயாபாஸ் தொடருந்து நிலையத்திலும் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular