Thursday, November 12, 2026

மட்டக்களப்பு இளைஞர் சுப்பிரமணியம் டானியசுக்கு இரானுவத்தினரால் நேர்ந்த அநீதி – துப்பாக்கி முனையிலும் அச்சுறுத்தல்

- Advertisement -
- Advertisement -

மட்டக்களப்பு இளைஞர் சுப்பிரமணியம் டானியசுக்கு இரானுவத்தினரால் நேர்ந்த அநீதி – துப்பாக்கி முனையிலும் அச்சுறுத்தல்


மட்டக்களப்பு ஒட்டமாவடி மயிலங்கரைச்சை தியாவட்டவான் இடத்திலுள்ள விகாரகையினை விஸ்தரிக்க சுப்பிரமணியம் டானியசுக்கு என்ற இளைஞரின் காணியின் வேலியினை பிடுங்கி பலவந்தமாக காணியினை புத்தபிக்குகள் அபகரிப்பு மேற்கொண்டமையுடன் இதனை தட்டிக்கேட்ட காணி உரிமையாளரான சுப்பிரமணியம் டானியசுக்கு இரானுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

மட்டக்களப்பு ஒட்டமாவடி மயிலங்கரைச்சை தியாவட்டவான் இடத்தில் ஸ்ரீ மகிந்தராமய எனும் விகாரை அமைந்துள்ளது. இவ் விகாரையின் அண்மைய காணியியே குறித்த இளைஞனின் காணியாகும் விகாரையினை விஸ்தரிக்கும் நோக்கில் குறித்த இளைஞனிடம் பௌத்த மதகுருக்கள் அக்காணியினை விகாரைக்கு வழங்குமாகு கோரியுள்ளனர். இதற்கு இளைஞன் மறுப்பு தெரிவித்தமையினையடுத்து விகாரை – இளைஞனின் காணியினை பிரிக்கும் வேலியினை பௌத்த மதகுருக்கள் பிடுங்கி எரித்தமையுடன் இதனை தட்டிக்கேட்ட அவ் இளைஞனின் தயாரையும் பௌத்த மதகுரு தள்ளி கீழே விழுத்தினார்.

அதன் பின்னர் அவ் இளைஞனின் வீட்டிற்கு சென்ற இரானுவ வீரர்கள் எவ்வித அனுமதியுமின்றி வீட்டை சேதனைக்குட்படுத்தியமையுடன் இளைஞரையும் அவரது அண்ணாவையும் இரானுவ முகாமிற்கு அழைத்து சென்றனர். அவ் விகாரையினை அண்மித்த காணியினை விகாரைக்கு வழங்குமாறும் இல்லை என்றால் பிணமாக தான் செல்வீர்கள் என துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்தினர். அவர்களை அச்சுறுத்திய இரானுவத்தினர் சிங்கள மொழியில் கடிதம் ஒன்றினை எழுதி அவர்களிடமிருந்து காணி உரிமை விகாரைக்கு என கடிதம் ஒன்றினையும் பெற்றுக்கொண்டனர்.

இவ் விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செல்ல முற்பட்ட போதிலும் இரானுவ அச்சுறுத்தலினால் அவர்கள் இதுவரை முறைப்பாடு எதுவும் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இரானுவத்தினரின் அச்சுறுத்தல் தினசரி அதிகரித்த வண்ணமேயுள்ளமையுடன் உயர் அதிகாரிகளும் இரானுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை கண்டிக்காது இரானுவத்தினருக்கு உடந்தையாக செயற்படுகின்றமை மன வேதனையளிக்கும் விடயமாகும்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular