பல்வேறு தொழில்களில் பணியாற்றும் 55 வயதை எட்டிய அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நன்மைகளை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் தங்களை www.garusaru.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் மேற்படி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊடகவியலாளர்கள், பெயிண்டர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், தொழிற்சங்கங்களை அமைக்க முடியாத பஸ் சாரதிகள் என அனைவரும் பதிவு செய்ய முடியும்.
நாட்டின் தொழிலாளர் படை பொதுத்துறையில் ஓய்வூதியம் பெற முடியும் என்பதுடன், தனியார் துறைக்கு ETF/EPF கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.