Wednesday, December 11, 2024

யாத்திரைக்கு சென்ற வேன் வீதியை விட்டு விலகி விபத்து : ஒருவர் பலி!

- Advertisement -
- Advertisement -

யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26.03) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேன் சாரதிக்கு நித்திரை மயக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதியதில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதில்  வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular