- Advertisement -
- Advertisement -
சில பிரதேசங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -