தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக மழை மற்றும் காற்று தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என்பதுடன். மாத்தரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 75 மி.மீறறர் அளவில் மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் காற்றானது வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் காற்று உள்ளிட்ட தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.