- Advertisement -
- Advertisement -
இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை எரியூட்டிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இன்றைய தினம் (02.04) இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் உடு புடவைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதுடன் பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
- Advertisement -