Monday, May 20, 2024

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயரும் வெப்பநிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை உள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (16.03) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மாகாணங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹத்த மெனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular