- Advertisement -
- Advertisement -
மியன்மார் பயங்கரவாத குழுவால் மற்றுமொரு இலங்கையரும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட தகவலுக்கு அமைய, மேலும் 15 பேர் கொண்ட மற்றுமொரு குழு குறித்த முகாமுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -