இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த இரசாயனங்களால் சிறுநீரகநோய், புற்றுநோய், தைராய்ட் , கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அத்தோடு இரத்தம் மற்றும் தாய்ப்பாலின் மூலம் தாயிடமிருந்து குழந்தைக்கு இந்த இரசாயனங்கள் பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் செக் குடியரசில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறை நடத்திய ஆய்வில் நீரை வடிய விடும் துணியால் செய்யப்பட்ட ஏப்ரன்கள், ரெயின்கோட்கள் போன்றவற்றிலும் மோசமான இரசாயனங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.