Thursday, May 9, 2024

இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு – ஐவர் படுகொலை!

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிஃபென்டர் காரில் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular