Monday, May 20, 2024

இலங்கை மக்களுக்கு பெறும் சுமையாக மாறிய பெறுமதி சேர் வரி! அடுத்த ஆண்டு முதல் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிப்பு!

இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) முதல் மக்களின் வாழ்வாதார செலவுகள் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அடுத்த ஆண்டு முதல் 18 வீத பெறுமதிசேர் வரி மக்களின் வாழ்க்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக உணவு பொருட்கள் முதல், நீர்,மின்சாரம், தபால் கட்டணம், என அனைத்து துறைகளில் இந்த வற் வரி தாக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.

இதற்கமைய தற்போது தபால் கட்டணத்தை திருத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மூலப்பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை VAT வரியை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஜனவரி முதலாம் திகதி முதல் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VAT வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததுடன், இதன் காரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான வரியும் 3 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சில ப்ரீபெய்ட் கார்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை மற்றும் வழங்கப்பட்ட டேட்டா கோட்டாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular