Thursday, May 9, 2024

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் நுகர்வில் வீழ்ச்சி!

மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு எரிபொருள் நுகர்வு கணிசமாகக் குறைந்துள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின், தலைவர்  ஷெல்டன் பெர்னாண்டோ கூறுகையில், எரிபொருளுக்கான நுகர்வோர் தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு எரிபொருள் கொள்வனவுக்கான நிவாரணம் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருள் தேவை குறைவதற்கு காரணமான காரணிகள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

விலைவாசி உயர்வால் மக்களின் வாகனப் பாவனையும் குறைந்துள்ளது. பலர் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.பழைய பாவனையுடன் ஒப்பிடும் போது அத்தியாவசியப் பயணங்களுக்கு வாகனங்களில் எண்ணெய் வைத்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular