Wednesday, May 8, 2024

சென்னை உட்பட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள மாலத்தீவுப் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது.இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும்.

இதன்காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு மழைபெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular