- Advertisement -
- Advertisement -
பலாங்கொட கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் சடலங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை இராணுவத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கமைய தற்போது நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -