இவ்வருடம் நீர் கட்டணத்தில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடைசியாக 2023 ஆகஸ்ட்டில் குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், தேர்தலை இலக்காகக் கொண்டு உத்தேச நீர் கட்டண சூத்திரம் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்படும் வதந்திகளை வன்மையாக நிராகரிப்பதாக கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கிகளுடன் கூட்டு முயற்சியாக கொள்கை அடிப்படையிலான நீர் கட்டண சீர்திருத்தத்திற்கான செலவு மீட்பு சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதில் அமைச்சகம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் கூறினார்.