வாகனங்களின் விலை அதிகரிப்பு!

47

இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆட்டோ டீலர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்த போதிலும், தனியார் வாகனங்களின் இறக்குமதி முடிவுக்கு வந்துள்ளதாக ஆட்டோ டீலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலை தொடருமானால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.