இவ்வருட இறுதியில் இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் இரண்டு தடவை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருட இறுதியில் 5000 கோடி ரூபா பாரிய இழப்பை ஈடுகட்ட எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெற்று தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதால் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணத்தை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.