மாயமான பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!

16

கிளிநொச்சியில் நேற்று (14.09) மாலை காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுஐயன்குளம் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த சதுரங்க என்ற 28 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சுற்றிவளைப்பிற்காக சென்றிருந்த சதுரங்க என்ற கான்ஸ்டபிள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடதக்கது.