யாழ்ப்பாண கலைஞர்களின் பட்டிதொட்டியெல்லாம் பரவும் ஆலங்குருவியே

30

பட்டிதொட்டியெல்லாம் பரவும் ஆலங்குருவியே

யாழ்ப்பாண கலைஞர்களின் கூட்டு படைப்பாக வெளிவந்துள்ள ஆலங்குருவியே பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பல அரச தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான அருள்செல்வம் இயக்கியுள்ளார். இவரது ஏனைய படைப்புக்களை போலவே இந்த பாடலும் தனித்துவமான வரவேற்பினை பெற்றுவருகின்றது.

பாடலுக்கான இசையை ஸ்ரீவிஜய் ராகவன் கோர்த்துள்ளதுடன் பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார் . அழகிய மயக்கும் மெட்டுக்கு பாடல்வரிகளை கோர்வையாக எழுதியுள்ளது சிறப்பானது

படப்பிடிப்பு தளம் யாழ்ப்பாணம்; கலாசார தன்மை மிளிரும் மண்ணை வெகு சிறப்பாக படம்பிடித்து அசத்தியுள்ளார் பன்முகத்திறமையாளர் அருள்செல்வம் பாடலை படத்தொகுப்பு செய்தவரும் அவர்தான், நடிகர்களான லஜந்தா குணாளன் , கிறிஸ்டினா கிரேஸ், சோபிதன், டருன் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நமது மண் வாசனையுடன் இணைந்த இந்த பாடல் மற்றும்திறைமையான நம் கலைஞர்களின் அத்தனை முயற்சியும் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.