Wednesday, May 8, 2024

செல்போனை கழிவறைக்கு எடுத்து செல்பவரா..? அப்போ.. இந்த பேராபத்து உங்களுக்குத்தான்

இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள்.காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை செல்போனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் வேலைக்காக செல்போனை பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலர் பொழுதுபோக்கிற்காக செல்போனை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். செல்போன்களை பயன்படுத்துவதால் கழுத்துவலி, மணக்கட்டுவலி, முழங்கை வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.சிலர் கழிவறைக்கு போகும்போது கையில் செல்போனை கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளனர். இன்னும் சிலரோ கழிவறைக்கு செல்லும்போது பத்திரிகை பேப்பரைகூட கொண்டு செல்வதுண்டு.இந்த பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்போ இந்த பாதிப்புக்கள் எல்லாம் உங்களுக்குத்தான்…

1. கழிவறைக்குள் எடுத்துச் செல்லும் செல்போனை யாரும் சுத்தம் செய்வது கிடையாது. அப்படி சுத்தம் செய்யவில்லையென்றால், கழிவறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் தொற்றிக்கொள்ளும். இதனால நோய் பாதிப்பை உண்டாக்கிவிடும். கழிவறைக்கு எடுத்துச்செல்லும் செல்போனில் 10 மடங்கு அதிக கிருமிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2. கழிவறைக்கு எடுத்துச் செல்லும் செல்போனை சுத்தம் செய்யவில்லையென்றால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் நம் உடலில் சென்று வாந்தி, டைரியா போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் விஷயமாக மாறி நம் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்.

3. செல்போனை கையில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருப்பதால், மலம் கழிக்க முடியாமல் போகும். இதனால், ஆசனவாயில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் வாழ முடிந்தவரை செல்போனை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். மேலும், செல்போன் இல்லாமல் உங்களால் இருக்கமுடியாதுதான். அந்த எண்ணத்தை தவிர்க்க வேறு வேலைகளில் உங்கள் கவனங்களை செலுத்துங்கள்.

RELATED ARTICLES

Most Popular