- Advertisement -
- Advertisement -
வவுனியா வைத்தியசாலையில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டையடுத்து குருதி கொடை வழங்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில் நேற்று (19.04) இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா, வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் குருதித் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இதில் இளைஞர், யுவதிகள் பலரும் தாமாகவே முன்வந்து இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -