Thursday, February 13, 2025

பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

- Advertisement -
- Advertisement -

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular