- Advertisement -
- Advertisement -
முள்ளியவெளி – நெடுங்கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் நேற்று (10.04) உயிரிழந்துள்ளார்.
விபத்தில் முள்ளியவெளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கணுக்கேணி பகுதியில், பூண்டன்வயல் சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -