- Advertisement -
- Advertisement -
மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை வாரியம் உயர்த்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபைக்கு அவசியமில்லை என தேசிய மக்கள் படையின் உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் தலைவர்சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -