Monday, May 20, 2024

சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவுக்கூற ஏற்பாடு!

ஆசிய கண்டத்தை உலுக்கிய சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 5,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இந்நிலையில் அவர்களை நினைவுக்கூறும் நிகழ்வு வருடா வருடம் நடைபெற்று வருகிறது.

இதன்படி இவ்வருடத்திற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு  காலி ஹிக்கடுவ தெல்வத்த பரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதன்படி அன்றைய தினம், 09.25 மணி முதல் 09.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளவும், அந்த இடங்களில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு சமய வழிபாடுகளை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular