Monday, May 20, 2024

கனடாவில் வேலைவாய்ப்புகளுக்காக புலம்பெயர்ந்தோர் அவசியம்: புலம்பெயர்தல் அமைச்சர் தகவல்

கனடாவிற்கு புதிதாக புலம்பெயர்ந்தோர் வராவிட்டாலும் கூட, கனடாவில் நிலவும் வீடுகளுக்கான தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிப்பது சாத்தியமே இல்லாத ஒன்று என கனடாவின் புதிய புலம்பெயர்தல் அமைச்சர் கூறியுள்ளார் .

மேலும், கனடாவின் முன்னெடுக்கப்படும் கட்டுமானப்பணிகளுக்கு புலம்பெயர்ந்தோர் அவசியம் தேவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையானது புதிய புலம்பெயர்ந்தோரால் அதிகரிப்பதாக சமீபத்தில் கனடா வங்கி தெரிவித்திருந்தது.

இது குறித்து கனடாவின் புதிய புலம்பெயர்தல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள Marc Miller இடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள், கனடா வங்கி கூறியதற்கமைய கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர்.

குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெளிநாட்டிலிருந்து கனடாவுக்கு வரும் திறன்மிகுப் பணியாளர்கள் இல்லையென்றால், இப்போது கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது.

புதிய வீடுகளைக் நிர்மானிப்பது சாத்தியமே இல்லாத விடயமாக மாறக்கூடும். புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து மக்கள் கேட்கிறார்கள் என்றால் என்ன பொருள்?

நமக்கு வீடுகளைக் கட்டுவதற்காக தேவைப்படும் புலம்பெயர் கட்டுமானப்பணி தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா? அல்லது குடும்பங்கள் இணைவதைத் தடுப்பதா?அப்படியென்றால் அது அவர்களுடைய மன நலனையும், ஏற்கனவே இங்கு வந்துவிட்ட புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களின் நலனை பாதிக்குமல்லவா? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular