வவுனியாவில் கைக்குழந்தை ஒன்றின் தாயார் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெற்ற மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த தாயார் ஒருவர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மாவட்டங்களுக் கிடையில் நடைபெற்ற 13 வது வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் ஐந்து மாவட்டங்கள் கலந்துகொண்டிருந்தன, அந்தவகையில் வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட வீராங்களைகளில் ஒரு கைக்குழந்தையின் தாயாராகிய திருமதி கரோன் சுலக்சி கலந்துகொண்டு வவுனியாவிற்கு ஒரு வெண்கலப்பதகத்தை வென்றுள்ளார்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் வடக்கு மாகாண குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளராகிய எஸ்.நந்தகுமார் தலைமையில் பயிற்சி பெற்ற குறித்த பெண்மணி இச்சாதனையை புரிந்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பயிற்றுவிப்பாளர் எஸ்.நத்தகுமார், வடக்கு மாகாண குத்துச்சண்டை போட்டியில் பல வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தாலும் தேசிய ரீதியில் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்ற வீராங்கனைகளுடன் மோதி குறித்த தாயார் வெற்றி பெற்றிருந்தமை பாராட்டிற்குரியது என குறிப்பிட்டார்.

hey