வவுனியா மக்களுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்துள்ள வேண்டுகோள்வவுனியாவில் கொ ரோனா தொ ற்றுக்கு இலக்கானவர்கள் என சந் தே கிக்கப்பட்டவர்கள் சிலருக்கு பி.சி.ஆர் பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டு; தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார நடைமுறையில் க ண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொலிசார், ப டை யினர், சுகாதாரத்துறையினர், அரச அதிகாரிகள் ஆகியோருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்று வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் தற்போதைய நிலைமைகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைமுறையிலுள்ள சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றி முககவசம் அணிதல், வங்கிகள், அரச திணைக்களங்களுக்கு செல்ல முன் சவர்க்காரம் இட்டு கைகழுவுதல் , சமூக இடைவெளியை க டைப்பிடி த்தல், பா துகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கல் போன்ற செயற்பாடுகளை தொடர்ந்து பின்பற்றவும். பொது நிகழ்வுகள், ஊர்வலங்கள், கழியாட்ட நிகழ்வுகள், தனியார் வகுப்புக்கள், பொதுமக்கள் ஒன்றுகூடும் அனைத்து நிகழ்வுகளும் த ற் கா லிகமாக மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது .

பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிவதுடன் வெளியே கை க ழுவி உட் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் . வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வ ழிநடத்தலில் நகரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பொதுமக்கள் ப டை த்து றையினர், சுகாதாரத் துறை யினருக்கு பூர ண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேலும் தெரிவித்துள்ளார் .

hey