வவுனியாவில் 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவுகாலை வரையான கடந்த 24 மணி நேரத்திற்குள் 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் அவதானிப்பு நிலையப் பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8.30 மணிமுதல் இன்று காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்திற்குள் வவுனியாவில் 56.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இது கடந்த வருடத்தில் குறிப்பிட்ட மழை வீழ்ச்சியை விடவும் குறைவான மழை வீழ்ச்சி. இன்று மாலை சாதாரண மழை பெய்யக்கூடும் இ டி மி ன்னல் தா க்கம் குறைவாக காணப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நீண்ட நாட்களின் பின்னர் நேற்று மழை பெய்துள்ளது. பல நாட்களாக வரட்சியான காலநிலை காரணமாக விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஆர்வமற்ற நிலையில் காணப்பட்ட பேதும் நேற்று மாலை பெய்த க டும் மழையை அடுத்து தமது நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey