வவுனியா மாணவிகள் வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் சாதனை2020ஆம் ஆண்டுக்கான வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் 59 கிலோகிராம் எடைப்பிரிவில் 112 கிலோகிராம் தூக்கி நி.சுஸ்மிதாகினி முதலாம் இடத்தையும், 49 கிலோகிராம் எடைப்பிரிவில் 88 கிலோகிராம் தூக்கி ச.நிதர்ஷினி இரண்டாம் இடத்தையும், 81 கிலோகிராம் எடைப்பிரிவில் 74 கிலோகிராம் தூக்கி இ.கஜனிகா மூன்றாம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஞானஜீவன் ஆசிரியர் இவர்களிற்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey