திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று! பாடசாலை மாணவர்கள் 31 பேர் தனிமைப்படுத்தல்இலங்கையில்

கம்பஹா – திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்கு பெ ண் ஒருவர் இலக்காகிய நிலையில், அவரது 16 வயதான மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சி றுமி கொழும்பிலுள்ள ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சி றுமி கல்விபற்ற பாடசாலையில் 31 மாணவர்களும் அவர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மாணவி அந்த பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் முழுவதும் அவர் பாடசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த மாணவியின் சக வகுப்பு மாணவர்கள் 31 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த மாணவி மற்றும் அவரின் தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey