யாழ்.வடமராட்சி கிழக்கில் பரபரப்பு..! 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பபட்டனர், 70 பேர் வீடுகளில் கட்டாய தனிமைப்படுத்தலில்யாழ்.வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கடலட்டை பிடிப்பதற்காக தங்கியிருக்கும் மன்னார் மாவட்ட மீனவர்களுடன் இந்திய மீனவர்கள் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 79 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

குடாரப்பு பகுதியில் கடலட்டை தொழிலுக்காக மன்னார் மாவட்ட மீனவர்கள் தங்கியிருக்கும் நிலையில் அவர்களுடன் இந்திய மீனவர்களும் எல்லைதாண்டிவந்து தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியை முற்றுகையிடுவதற்கு முயற்சிக்கப்பட்ட நிலையில்,

இந்திய மீனவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அவர்களுடைய நெருக்கமான தொடர்புகளை பேணிய 9 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் வீடுகளில் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

hey