வவுனியாவிற்கு விஐயம் மேற்கொண்ட ஊடக அமைச்சர் மற்றும் இராசாங்க அமைச்சர் : பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வுவவுனியாவில்

ஊடக அமைச்சர் மற்றும் இராசாங்க அமைச்சர் மற்றும் வன்னி தேர்தல் தொகுதியில் உள்ளடங்கியுள்ள வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03.10.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது.

வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல , வெகுஐன ஊடக இராசாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் அவர்களின் குழுவினர் வருகை மேற்கொண்டு வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த

ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியதுடன் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார் அத்துடன் அவற்றிற்கு விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.

இவ் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் . எம்.சமன் பந்துலசேன மற்றும் அரச அதிகாரிகள் , வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் , அரசாங்க தகவல் திணைக்களத்தினர் , சர்வமத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey