வவுனியாவில் 55மில்லியன் செலவில் கட்டப்பட்ட கேட்போர் கூடம் திறந்து வைப்புவவுனியாவில்

வவுனியா மாவட்ட செயலகத்தில் 55மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (01.10.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றிருந்தது.

கேட்போர் கூடத்தின் நினைவுக்கல்லினை உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்துடன் கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் உள்ளகப் பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , குலசிங்கம் திலீபன் , செல்வம் அடைக்கலநாதன் ,

ரிசாட் பதியூதின் , காதர் மஸ்தான் மற்றும் வடமத்திய மாகாண ஆளுனர் , கிழக்கு மாகாண ஆளுனர் , வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் , இரானுவத்தினர் , பொலிஸ் பொருப்பதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey