நாளொன்றுக்கு இத்தனை இலட்சம் வாகனங்கள் கொழும்பிற்குள் வருகின்றனவா? திணறும் பொலிஸார்நாளாந்தம் கொழும்பு நகருக்குள் 3 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் உள்நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்த வாகனங்களை வழிநடத்துவதற்கு போதுமான பொலிஸ் அதிகாரிகள் இல்லை என பொலிஸ் போக்குவரத்து பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களில் அதிகமாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளே பயணிப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஒழுங்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றதா என பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வினவிய போது,

போக்குவரத்து ஒழுங்கை சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தினால் போக்குவரத்து பொலிஸார் மேலதிக சிர மங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிடடுள்ளார்.

மேல் மாகாணத்தில் வீதி ஒழுங்கை நடைமுறை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

hey