வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 22 ஆவது வருடப் பொதுக்கூட்டம்வவுனியாவில்

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 22வது வருடாந்த பொதுக் கூட்டம் வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் எஸ்.இராஜேஸ்வரன் தலைமையில் இன்று (19.09.2020) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 22 வருட காலமாக இயங்கி வரும் குறித்த சங்கமானது சமூக மட்டத்திலும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவதுடன் பஸ் உரிமையாளர்களுக்கான பங்கு இலாபத்தினையும் வழங்கி வருகின்றது.

கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற பங்கு இலாபத்தினை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் , வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ,

வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆறுமுகம் அம்பிகைபாலன் , வவுனியா நகரசபை உறுப்பினர் லரீப் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் , தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

hey