வவுனியாவில் சுற்றுலா மையம் அமைத்தல் தொடர்பான வ ழக்கு ஒத்திவைப்புவவுனியாவில்

வவுனியா குளத்தில் மண் நிரப்பி சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு வருவதற்கு எ திராக குடியிருப்பு கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றில் தா க்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா குளத்தில் நகரசபையினால் மண் நிரப்பப்பட்டு சுற்றுலா மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதனை ஆட்சேபித்து குறித்த குள கமக்காரர் அமைப்பால் வவுனியா நீதிமன்றத்தில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வி சாரணைக்கு குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வ ழக்கை முதற்தோற்றத்திலேயே தள்ளுபடி செய்யுமாறு நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள வழக்கறிஞர்களால் இரண்டு ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது. மற்றைய ஆட்சேபனை தொடர்பில் 25ம் திகதி தெரிவிக்கப்படும் என நீதிபதியால் வழக்கு ஒ த்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வ ழக்கு கடந்த 14ம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழங்கப்பட்ட ஆணையாகிய “குறித்த இடத்தில் மேலதிக அபிவிருத்தி வேலைகள் எதையும் செய்யக்கூடாது என்ற ஆணை தொடர்கிறது.

குறித்த வ ழக்கில் கமக்காரர் அமைப்பு சார்பில் சட்டத்தரணி குமார வடிவேல் குருபரனும், நகரசபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணிகள் யூஜின் ஆனந்தராஜா, திருச்செல்வம் திருவருள், ம. சுதர்சினி, யாழினி கௌதமன், மரிய நிசாந்தினி தியாகரன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்

hey