காதலனுக்கு விடைகொடுத்துவிட்டு கணவருடன் திருமண நாளை கொண்டாடச் சென்ற பெண்: ஒரு ஆ ச்சரிய செய்தி!பிரித்தானியாவில், ஒரு நாள் காலையில் எழுந்த ஒரு பெண், தன்னுடன் வாழும் காதலருக்கு விடைகொடுத்துவிட்டு, தன் கணவருடனான திருமண நாளை கொண்டாடச் சென்ற வே டிக்கை சம்பவம் பிரித்தானியாவில் அரங்கேறியது.

அந்த கணவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். Merseyside என்ற இடத்தில் வாழும் Kate Cunningham (38) என்ற அந்த பெண்ணின் கணவர் ஒரு மரம். அந்த மரத்தின் பெயர் Elder.

சென்ற ஆண்டு அந்த மரத்தை திருமணம் செய்துகொண்ட Kate Cunningham, அந்த மரத்துக்காக தன் பெயரையே Kate Elder என்று மாற்றிக்கொண்டார்.

தனது மகனுக்கு மட்டும் அந்த திருமணம் கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியதாக தெரிவிக்கிறார் Kate.

மற்றபடி அவரது காதலர் உட்பட யாருமே அவரை எதுவும் சொல்லவில்லையாம்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தடபுடலாக இசை நிகழ்ச்சியுடன் நண்பர்கள் உறவினர்கள் சூழ Elderஐ மணந்துகொண்ட Kate, இப்போது திருமணம் முடிந்து ஓராண்டு ஆனதைத் தொடர்ந்து, தனது நண்பர்களுடன் தனது முதலாவது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.

இப்போது தங்கள் காதல் வாழ்க்கை மேலும் அதிக இன்பமாக இருப்பதாகக் கூறும் Kate, தனக்கு Elderஐ வி வாகரத்து செய்யும் எண்ணமே இல்லை என்கிறார்.

hey