வவுனியா இ.போ. ச சாலைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலிரனவக்க விஜயம்இ.போ.ச வின் வவுனியா சாலைக்கு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலிரனவக்க இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தலைவருக்கு மாலை அணிவித்து கௌரவமளிக்கப்பட்டிருந்துடன் இ.போ.ச வின் வவுனியா சாலையின் உத்தியோகத்தர்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன் போது வவுனியா சாலை உத்தியோகத்தர்கள், சாரதிகள், காப்பாளர்கள் எதிர்நோக்கும் பி ரச்சனை தொடர்பாக கேட்டறிந்ததோடு வவுனியா சாலையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தலைவர் இளஞ்செல்வன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இ.போ சபையின் தலைவர் கின்சிலிரனவக்க, வட பிராந்திய முகாமையாளர், பொறியியளாலர்கள், சாரதிகள் ,காப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

hey